தமிழகம் முழுவதும் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் 1146 பேர், செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 80 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 3 பேர், கடலூரில் ஒருவர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் 5 பேர், விழுப்புரத்தில் 6 பேர், தூத்துக்குடியில் 14 பேர், மதுரையில் 7 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 5 பேர், விருதுநகரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராணிப்பேட்டை மற்றும் தஞ்சையில் தலா 2 பேர், தென்காசியில் 2 பேர், ராமநாதபுரத்தில் 4 பேர், கரூரில் 6 பேர், கன்னியாகுமரியில் 10 பேர், நாகப்பட்டினத்தில் 6 பேர், திருவாரூரில் 4 பேர், வேலூர் மற்றும் சிவகங்கையில் 2 பேர், புதுக்கோட்டை மற்றும் தர்மபுரியில் தலா ஒருவர், கிருஷ்ணகிரியில் 8 பேர், விமானநிலையத்தில் 6 பேர், ரயில்வேயில் 3 பேர் என இன்று மொத்தம் 1,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு 1,000த்தை கடந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மாநிலத்தில் எப்போது இல்லாத அளவு இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 0.832% ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்களில் ஆண்கள் 18,698 பேர், பெண்கள் 11446 பேர் மற்றும் திருநங்கையர் 17 பேர் ஆவர்.