Categories
மாநில செய்திகள்

காய்ச்சல், தொண்டை வலி வந்து ஒரே நாளில் சரியானாலும் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது.. நிபுணர் குழு..!!

ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையை பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், கொரோனா பாதிப்பு பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கொரோனவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர். காய்ச்சல், தொண்டைவலி வந்து ஒரே நாளில் சரியானாலும் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது என தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறைய தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் அதிகமாக பரிசோதனை செய்வதால் பாதிப்பு எண்ணிக்கை உயரும். ஆனால் உயிரிழப்பை குறைக்க அதிக பரிசோதனை அவசியம் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 60 வயதிற்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகளால் தான் உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ளது என கூறியுள்ளனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்று நோய் மற்றும் சிறுநீரக கோலாறு உடையவர்களும் கொரோனவால் அதிகம் உயிரிழக்கின்றனர் என கூறியுள்ளனர்.

Categories

Tech |