இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை 6ஆக அதிகரித்துள்ளது.சற்று நேரத்துக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்து 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் தற்போது உயிரிழந்த நிலையில் தற்போது பீகார் மாநிலம் பாட்னாவில் 38 வயது நபர் உயிரிழந்துள்ளார். இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.