கொரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயானது சீனவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பதிவானது. அதன் பிறகுதான் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. இந்நிலையில் இது குறித்து உண்மையான தகவல்களை சீனா வெளிப்படையாக கூறவில்லை. எனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வந்தது.
எனவே இது குறித்து WHO சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சீனா சென்ற WHO கொரோனா குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கொரோனா சீனா ஆய்வகத்தில் இருந்து பரவி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்குமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.