Categories
உலக செய்திகள்

கொரோனாவின் அபாயம் குறித்து எச்சரிக்கவில்லை: உலக சுகாதார மையத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்திய ட்ரம்ப்!

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் உருவாகி இன்று உலகையே மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர்.

அதிபரின் இந்த குற்றசாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்தது. கொரோனா வைரஸின் வீரியம் குறித்தும், அபாயம் குறித்தும் உலக சுகாதார நிறுவனம் விளக்கமாக கூறி எச்சரிக்கவில்லை என்றும் சரியான நேரத்தில் வெளிப்படையான தகவலைகளை பெறவும், கண்காணிக்கவும், அதனை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தவறிவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா சார்பில் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்தியாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வழங்கி வந்த நிதியை இந்த ஆண்டு வழங்கப்போவதில்லை எனவும் அதிபர் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 126,776 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 484,831 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதித்த அமெரிக்காவில் இதுவரை நேர்ந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 26,064 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 614,246 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,820 ஆகும்.

Categories

Tech |