Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் புகுந்து…. மருத்துவரை தாக்கிய கொடூரர்கள்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

அசாம் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்று அவரது உறவினர்கள் மருத்துவரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த கியாசுதீன் என்பவர் சிகிச்சை பலனின்றி அலட்சியத்தின் காரணமாக தான் உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் இதுபற்றிக் கூறி தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர் உடல் நிலை மோசமான காரணத்தினாலேயே உயிரிழந்ததாக மருத்துவர் சேனாதிபதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் மருத்துவர் சேனாதிபதியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அவர் மட்டுமில்லாமல் அங்கு பணிபுரியும் பெண் உள்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடர்ந்து மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.ஜெயலால் என்பவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மருத்துவர்கள் நாங்கள் தங்களது உயிர்களை பொருட்படுத்தாமல் இரவு பகலும் உயிர்களை காப்பாற்றுவதற்கு போராடி வருகிறோம்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கும் நோயாளிகளின் உறவினர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது. இதனால் மருத்துவர்கள் மிகுந்த அச்சத்திலும் கவலையிலும் உள்ளனர். இதுபோன்று மருத்துவர்கள் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |