பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கோரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிகுறிகள் தென்பட்டதும் அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆகையால் அவர் மருத்துவரின் அறிவுரையின் படி தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.