மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1,388 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,750ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303ஆக உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1,388ஆக உயர்ந்துள்ளது. அதில் 428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 948 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.