Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து போலியான அறிக்கை…. டுவிட்டரில் வைரல்…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டதாக போலி தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை வாட்ஸ்அப் (புலனம்), ட்விட்டர் (கீச்சகம்) போன்ற தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கை வைரல் ஆனதை தொடர்ந்து மத்திய அரசின் பிஐபி நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி வைரலாகும் அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை என்று பிஐபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சில சமயம் உயிரிழப்புகள் நேரிடுகிறது. இதனால் போலியான செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பாதீர்கள்.

Categories

Tech |