Categories
உலக செய்திகள்

ஆச்சரியத்திலும் ஆச்சரியம்… பனிக்கட்டியாக வந்த கொரோனா… எந்த நாடு தெரியுமா?

கொரோனா வைரஸ் உருவத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

பீஜிங்கில் கடந்த வியாழக்கிழமை அன்று கல் மழை என்று சொல்லப்படும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஆலங்கட்டி மழை என்றாலே ஆச்சரியமானது, இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் ஆலங்கட்டி மழையின் போது பொதுவாக வானிலிருந்து விழும் பனிக்கட்டிகள் உருண்டையாக இருப்பது வழக்கம்.

ஆனால் பீஜிங்கில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கீழே விழுந்த பனிக்கட்டிகள் கொரோனவைரஸ் வடிவத்தில் இருந்துள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் வெளியானபோது அதில், ஆலங்கட்டி மழையின் போது கீழே விழுந்த பனிக்கட்டிகள் வழவழப்பாக இல்லாமல் கொரோனா வைரஸ் போன்று கூர்மையான வெளிப்புறத்தோடு அமைந்திருப்பதை காணப்படுகின்றது.

Categories

Tech |