Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி” 3 பேர் மட்டுமே அனுமதி…. பிரபல வங்கி அதிரடி…!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரபல வங்கியில்  உள் நுழைய மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் பிரபல வங்கி ஒன்றில் மக்கள் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக மூன்று வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் பண பரிவர்த்தனையை மேற்கொண்ட பின் அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே மாவட்டத்தில் வேறு சில வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி சோப் போன்றவற்றை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவிய பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வங்கி ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணியை மேற்கொண்டனர்.

Categories

Tech |