கொரோனா பாதிப்பால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், எனது மகனுடன் மலேசியாவில் மாட்டிக் கொண்டுள்ள 700 இந்தியர்களை மீட்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் தெய்வநாயகி நகரில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மகன் முகேஷ். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் பாலிடெக்னிக் கல்லூரியில், பிடெக் இறுதி ஆண்டு படிப்பை படித்து வந்துள்ளார். இந்த படிப்பில் கடைசி இரண்டு மாதம் மட்டும் வெளிநாடு சென்று பிராஜக்ட் செய்துவர வேண்டும் என்ற கட்டாயத்தால் கடந்த ஜனவரி 29-ம் தேதி தனது மகனை முத்துராமன் மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு பிரபல பல்கலைக் கழகம் ஒன்றில் முகேஷ் படித்துவர கொரோனா குறித்த அச்சம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தர இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் எனது மகன் மேல்படிப்புக்காக சென்றிருந்த சமயத்தில் போராட்டத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அங்குள்ள தன்னார்வ தொண்டர்களால் நிறுவனத்தில் மகன் பராமரிக்கப்பட்டு வருகிறான். அவனை இந்தியா மீட்டு வர வேண்டும். எனது மகனோடு சேர்த்து 700 இந்தியர்கள் அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர்களையும் அரசாங்கம் கணக்கில் கொண்டு மீட்டுவர உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.