திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் வகையில் 13 படுக்கை கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுவரை அண்டை நாடான சீனாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட பல இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சீனாவில் இருந்து வந்த இந்தியர்கள் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காற்றின் மூலம் எளிதில் பரவும் இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவகூடாது. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் பல்வேறு பகுதிகளில் வைரசுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காங்கிரசுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி கூறுகையில் கொரோனா வைரஸுக்காக ஒதுக்கப்பட்ட தனி வார்டில் 13 படுக்கைகள் உள்ளன. வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக அனைத்தும் மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.