மத்திய அரசு 2 புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளா மற்றும் மராட்டியத்தில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய இரு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு இ484கே மற்றும் என்440கே போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பாலு கூறும்போது, இ484கே மற்றும் என்440கே ஆகிய இரண்டு புதிய வகை கொரோனா வைரஸ்கள் மராட்டியம் தெலுங்கானா மற்றும் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் போன்ற இடங்களில் உள்ள கொரோனா பாதிப்பு இந்தியாவில் உள்ளது எனவும், இந்த புதிய வைரஸ்கள் தான் கேரளா, மராட்டியம் போன்ற இரு மாநிலங்களிலும் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்பது விஞ்ஞான பூர்வமாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு வைரஸ் பிறழ்வுகள் கவனிக்கப்பட்டு இதுவரை 3500 திரிபுகள் மரபணு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், இதன் தன்மையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.