Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா” இடைவெளி இல்லை….. இனி இங்க தான் காய்கறி கடை..

தாம்பரத்தில் இடைவெளிவிட்டு காய்கறி வாங்கி செல்ல பள்ளி மைதானத்தில் காய்கறி அங்கன்வாடி அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி பால் உள்ளிட்டவற்றை வாங்க மட்டும் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதிலும் இடைவெளிவிட்டு வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அதனையும் கடைபிடிக்க முன் வந்தனர். ஆனால் தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியதால், இடைவெளிக்கு இடமில்லை. நோய் பரவுவதற்கான அபாயம் என்பது ஏற்பட்டது.

இதனால் காய்கறி மார்க்கெட் முழுவதும் மூட காவல்துறையினர் உத்தரவிட்டனர். அதே சமயத்தில் நோய் பரவலை தடுக்கும் விதமாக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கிடைக்க செய்யும் வகையிலும்,

கிழக்கு தாம்பரத்தில் உள்ள மைதானம் ஒன்றில் காய்கறி கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இந்த காய்கறி கடைகளை தாம்பரம் நகராட்சி கமிஷனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின் பேசிய அவர், தமிழக அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை தாம்பரத்தில் காய்கறி கடைகள் திறந்தவெளியில் பள்ளி மைதானத்தில் செயல்படும் என்று தெரிவித்தார். 

Categories

Tech |