கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சில நாடுகள் முழுமையாக வெளியிடவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் வுஹான் பகுதியிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் ஆட்டி படைத்துள்ளது. தற்போது வைரஸ் தொற்றின் பாதிப்பு பல்வேறு கட்டுப்பாடுகள் நடவடிக்கைகளுக்கிடையில் குறைந்துகொண்டு வருகிறது. அதனால் பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின் நிலைமை குறித்து உலக சுகாதார மையத்துடன் கொரோனா வைரஸ் இன் தீவிரம் மற்றும் அதன் பரவல் தன்மையை பகிர்ந்து கொண்டு வருகின்றன.
மேலும மாதங்களுக்கு முன்பு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு அதிக அளவில் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.இந் நிலையில் தான்சானியா துர்க்மெனிஸ்தான் மற்றும் வடகொரியா நாடுகள் ஓராண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல் குறித்து எந்தவித தகவல்களையும் உலக சுகாதார மையத்திற்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. பலமுறை அறிவுறுத்தியும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்களை பற்றி தகவலை அந்த நாடுகள் உலக சுகாதார மையத்திடம் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தான்சானியாவில் இருந்து இலாந்த்திற்கு புறப்பட்ட இருவர் தென்னாபிரிக்காவில் கொரோனவைரஸ் பரிசோதனை செய்து கொண்டபோது அவர்களுக்கு b 1351 வேரியண்ட் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தான்சானியாவிற்கு மீண்டும் உலக சுகாதார மையம் கொரோனா தாக்குதல் குறித்து அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டது. தான்சானியா அதிபர் இதனை நிராகரித்து வைரஸை கட்டுப்படுத்த இயற்கை மருந்தை பயன்படுத்துமாறு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகு மக்கள் அனைவரும் கடவுளை வழிபட்டு கொடிய வைரஸில் இருந்து தங்களை காத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
இதனை சுகாதாரத்துறை அமைச்சரும் கேட்டுக்கொண்டுள்ளார். தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியுமாறு அந்நாட்டு அரசிடம் அறிவுறுத்தினர் .அதனையும் மறுத்து வெளிநாடுகளிலிருந்து முகக்கவசம் இறக்குமதி செய்யாமல் தன் நாட்டிலேயே தயாரிக்கப்படும் முகக்கவசத்தை மட்டுமே அணிந்து வருகின்றனர். மேலும் மற்றொரு நாடான துர்க்மெனிஸ்தானும் வைரஸ் குறித்து எந்த தகவலையும் உலக சுகாதார மையத்திற்கு தெரிவிக்கவில்லை. மேலும் அந்நாட்டிற்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்று இன்னும் அந்நாட்டு மக்களிடையே தெரிவிக்காமல் மலேரியா காலரா காய்ச்சல்களை போலவே இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க தூதரகம் துர்க்மெனிஸ்தானில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மெக்னேஸ்தான் அகதிகள் ஐரோப்பியாவில் வாழும் மக்கள் கொரோனா வைரஸ் பரவல் மோசமாக இருப்பதாக கோரிய நிலையில் கொரோனாவை ஒரு நோயாகவே அந்நாட்டில் அங்கீகரிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் ஆன்லைன் மூலம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதாகவும் அகதிகள் அமைப்பு தெரிவித்தது. நாட்டின் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் அரசின் பிடியில் இருப்பதால் வைரஸ் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அந்நாட்டிடமிருந்து எந்தவித பாதிப்பு தகவலும் வராத நிலையில் உலக சுகாதார மையம் தனது கடமையை செய்து கொண்டு வருகிறது.
இது போன்று வட கொரியாவிலும் கொரோனா வைரஸ் குறித்த எந்த தகவலும் வெளிப்படையாக உலக சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை.வடகொரியா சீனாவுடன் பெரும் எல்லைப் பரப்பை பகிர்ந்து கொண்டு வரும் நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் பரவல் தங்கள் நாட்டில் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது . ஆனாலும் வடகொரியாவில் உள்ள அனைத்து எல்லைகளும் முழுமையாக மூட பட்டிருக்கிறது. வடகொரியாவின் வைரஸ் தொற்று தகவல் இப்பொழுது வரை மர்மமாகவே உள்ளது.