Categories
விளையாட்டு

கொரோனா  வைரஸ் பரவல்….! ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் பயணம் ரத்து …!!!

இந்த ஆண்டு  நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதிலும், கொரோனா  வைரஸ் பரவல் தாக்கத்தால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு போட்டியை, நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் 2வது அலையின்  தாக்கம் ,அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால்  ஒலிம்பிக் போட்டி, இந்த ஆண்டு  திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் , ஜப்பான் நாட்டிலும் கட்டுப்பாடு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரான தாமஸ்பாச் ,ஜப்பான் நாட்டில் டோக்கியோவிற்கு ,ஒலிம்பிக் போட்டி ஆய்வு பணிக்காக  பயணம் செல்ல  திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது ஜப்பானில் கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதை தொடர்ந்து ,அவர் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டது. இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவரான செய்கோ  கூறுகையில், டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தி இருப்பதால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் சுற்றுப்பயணம் தற்போது ரத்தாகி உள்ளதாகவும் ,விரைவில் அவருடைய சுற்றுப்பயணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |