Categories
லைப் ஸ்டைல்

கொரோனா வைரஸ் – நீங்களே கண்டுபிடித்து கொள்ளலாம்..!!

கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம்.

ஒட்டு மொத்த உலகத்தையும் இப்பொழுது அழித்துக் கொண்டிருப்பது தான் கொரோனா வைரஸ். இந்த கிருமி மக்களை அழிப்பதைதோடும் மரண அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனா உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவிதம்  நாமே அறிந்து கொள்வது எப்படி.? இந்த கொரோனா உங்களுக்கு இல்லை அப்படிங்கிறதுக்கு நீங்கள் ஓரளவுக்கு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது.இதனால் மக்களுக்கு எழுந்துள்ள அச்சம்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சாதாரண  காய்ச்சல் வந்தாலும், லேசாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும, ஐயோ நமக்கு கொரோனா வந்துருச்சு அப்படி என்கிற பயம் மக்களுக்கு இருப்பதுதான் இதன் கொடுத்தின் உச்சமாக இருக்கின்றது. ஆனாலும் அரசர்கள் இப்படியாக பயம் வேண்டாம், மருத்துவமனைக்கு சென்று உறுதிப்படுத்துங்கள் என்று மக்களை வலியுறுத்தி வருகின்றது. சாதாரண காய்ச்சல், சாதாரண சளித் தொந்தரவு, சாதாரண மூச்சு விடுவதில் சிரமம் கொரோனாவின் அறிகுறிகள் என்று சொல்ல முடியாது.

கொரோனா அறிகுறிகள்:

உங்களுக்கு கொரோனா தாக்கம் வந்துருச்சு அப்படின்னா இதை அறிந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களில் இருந்து அதிகபட்சம் 14 நாட்கள் ஆகலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து. சிலருக்கு அறிகுறியே இருக்காது. அதே போல கொரோனா இருக்கும் சிலருக்கு இது ஒன்னும் செய்யாது. ஆனால் அவர்களுக்கு தெரியாமலே, மற்றவர்களுக்கு பரவி விடும். அப்படி உள்ளவர்களை சூப்பேர்ஸ்லேண்டெர்  என்று கூறுவார்கள் மருத்துவர்கள்.  அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றுமே ஆகாது. இந்த நோய்களுக்கு வந்துருச்சு எப்படி என்பதை உறுதிப்படுத்த..

முதல் அறிகுறி:

எல்லாக் காய்ச்சலுக்கும் இந்த கிருமியாக இருக்கும்னு உறுதியா சொல்ல முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகமா இருந்துச்சுனா, நீங்க உங்க வீட்டில வச்சிருக்கிற தர்மா மீட்டரை கொண்டு செக் பண்ணலாம். அப்படி செக் பண்ணும் பொழுது 100 பாரன்ஹீட்டுக்கு இருந்தால் அது சாதாரண காய்ச்சல் என்று கணக்கிட முடியாது. உதாரணத்திற்கு 96- 97 , 100 இருந்தால் அது சாதாரண மனித உடம்பில் உள்ள சூடு. ஒருவேளை 100 பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் அது சாதாரண காய்ச்சலாக கருதப்படுகிறது. அப்படியே ஒவ்வொரு மனிதருக்கும் இந்த உடல் சூடு மாறுபடும். அதை காய்ச்சல் என்றும் சொல்ல முடியாது.

உடல் சூடு என்றும் சொல்ல முடியாது. ஆனால் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் இந்த நோய் தொற்றுக்கான முதல் அறிகுறி என்று கன்பார்ம் பண்ணலாம். இந்த காய்ச்சல் சோதனையை மதிய நேரத்திற்கும் மாலை நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சோதித்தால் உடம்போடு சரியான நிலையில் இருக்கும். அந்த நேரங்களில் சரியான வழிகாட்டுதலும் கிடைக்கும். இரண்டு மூன்று நாளைக்கு மேல் காய்ச்சல் இருந்தால்  முதல் அறிகுறி நீங்களே உறுதி படுத்திக்க கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.

 இரண்டாவது அறிகுறி: (வறட்டு இருமல்) 

நாம் சாதாரணமாக இருமும் பொழுது இந்த நோய்க்கான அறிகுறி இருக்காது. உங்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தாலும் அதற்கான அறிகுறி அப்படின்னு உறுதிப்படுத்த முடியாது. இந்த நோய்க்கான அறிகுறி சாதாரண இருமல் போல இருக்காது. சாதாரண இருமல் தொண்டை குழாயிலிருந்து  வரும். இந்த மாதிரியான வறட்டு இருமலை இதுவரைக்கும் நீங்கள் வாழ்க்கையில் அனுபவிக்காத இருமலாக இருக்கும். இந்த இருமல் உங்களுடைய இதயத்தில் இருந்து வருவதை நீங்கள் உணரலாம். அப்படி இருந்தால் நிச்சயம் இந்த நோய்க்கான முக்கிய அறிகுறியாக நாம் உணரலாம். சாதாரணமாக தொண்டையிலிருந்து  வர இருமலுக்கும், நெஞ்சில் இருந்து இதயத்தை இறுக்க பிடித்து வர கூடிய இருமலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால் இந்த தொற்று நோய்க்கான அறிகுறியை வேறுபடுத்திக் கண்டறிய முடியும்.

மூன்றாவது அறிகுறி:

மூன்றாவது முக்கிய அறிகுறிகள் இருந்துச்சுன்னா நிச்சயம் உங்களுக்கு இந்த நோய் தொற்று இருக்கலாம்  என்று  உறுதி படுத்திக்கோங்க. காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது மூச்சு உள்ளே இழுக்கப்பட்டு இதயம் அடைக்கும் போது உயிர் போகும் ஆபத்தை உணர்த்துவதாக இருக்கும். சாதாரண மூச்சு திணறலுக்கும், கொரோனா வைரஸ் மூச்சி திணறலுக்கும் இதுவே வித்தியாசம் தான் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த மூன்று அறிகுறிகளும் வெறும்  சாதாரண அறிகுறியாக இருந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. இதில் இரண்டு அறிகுறிகள் வந்துவிட்டாலே நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியமானது.

அதுமட்டுமில்லாமல் மருத்துவர்கள் உங்களுக்கு இந்த தொற்று நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னர் உங்களை நீங்கள் தனிமைப் படுத்துவது அதை விட முக்கியம். உங்களுக்கு  அறிகுறி  இருப்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம்.

Categories

Tech |