Categories
அரசியல்

கொரோனாவை தடுக்க இந்தியா கையாண்ட விதம் மிக மோசம்…!!

இந்தியா கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் மிகவும் மோசமானது என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் ஜோசப் டிக்லெட்ஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோசப் டிக்லெட்ஸ்  இந்த நோய் தொற்று காலத்தில் என்ன செய்யக் கூடாது என்பதை இந்தியா இன்னும் ஒரு குழந்தையாகவே உள்ளதாக விமர்சித்தார். இந்திய அரசு அறிவித்த உறடங்கு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், மாறாக புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நோய் மேலும் பரவுவதற்கு அது காரணமாக அமைந்தது என்றும் ஜோசப்  விமர்சித்துள்ளார்.

ஊரடங்கு என்ற  ஒரு விஷயத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு இந்தியா, ஒரு ஏழை நாட்டில் ஊரடங்கு என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி  கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார். மக்கள் எப்படி வாழ்வார்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது குறித்து அரசு யோசிக்கவே இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

வைரஸை பரப்புவதை விட மோசமானது எதுவுமில்லை என்பதை சிந்தித்து பார்க்க முடியாது. இந்த சூழலில் பிரதமர் மோடி பிரிவினை அரசியல் செய்து நாட்டை பிளவுபடுத்த முயல்வதாக குற்றம்சாட்டியுள்ள ஜோசப், அவரின் இந்த செயல் நாட்டின் அடித்தளத்தையே  பலவீனமாக்கி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |