சீனாவில் 107 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசி அந்நாட்டில் உள்ள 141 கோடி மக்கள் தொகையில் 107 கோடி பேருக்கு இதுவரை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதாவது சீனாவில் கோவிட் தடுப்பூசி 75.8% மக்களுக்கு முழுமையாக போடப்பட்டுள்ளது. மேலும் 3 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு Hunan Zhejiang உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று புதிதாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சீனாவில் 59 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.