உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90 சதவீத மக்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் என Pfizer நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என்றும், கொரோனா தொற்றை தடுக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.