பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக பிரதமர் மோடி இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவின் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,52,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில, அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய நிலைமையில் கொரோனா விதிமுறைகளை விழிப்புணர்வுடன் பின்பற்றினால் மட்டுமே நோய் கட்டுக்குள் வரும்.அதன்பின் மக்கள் அனைவரும் தானாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டாள் இந்நோய் பரவலை குறைத்து கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
தடுப்பூசி திட்டத்தையும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்பாகவே அரசு மற்றும் முக்கிய தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்கினர். ஆனால் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அச்சமடைந்த பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசியினை போட்டுக் கொள்கின்றனர். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.
எனவே பொதுமக்களுக்கு வசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சமூக கூடங்கள் ஆகியவற்றில் சிறப்பு முகாம் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 4 நாட்களுக்கு முகாம் நடத்தப்படும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நான்கு நாள் தடுப்பூசி திருவிழாவில் பல லட்சம் பேர் ஊசி போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்த முகாமில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் 10 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.