சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்வதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே கிட்டத்தட்ட பாதி மக்கள் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாவால் 7 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் பத்தாயிரத்து 400 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் மருத்துவமனை கட்டமைப்புகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் நிறுவனங்கள், பள்ளிகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கொரோனா பரிசோதனைகளுக்கு மத்திய அரசு நிதி அளித்து வந்தது. ஆனால் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மட்டும் பணம் செலுத்தி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.