Categories
மாநில செய்திகள்

அறிகுறி இல்லாமல் கொரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை… தமிழக அரசு முடிவு!

அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. நிலவேம்பு, கபசுர குடிநீர் 10 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது பாதிப்பு கண்டறியபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை என வருவாய்த்துறை செயலாளரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு புறம் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நொய் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கனக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |