Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டண விவரம் – தமிழக அரசு வெளியீடு!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கென கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் எழுந்தது.

அதன் எதிரொலியாக தமிழக அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Coronavirus: How are patients treated? - BBC News

கிராம புற தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.7,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடம் இருந்து வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |