Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை… ரொக்கமாக பணம் பெறலாம்… வரம்பு நிர்ணயம் அதிகரிப்பு…!!

கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தை ரொக்கமாக பெறுவதற்கான வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கமாக பெறலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. சிகிச்சை கட்டணமாக ரொக்கமாக பெற ஏற்கனவே வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |