உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இன்று காலை பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கள்ளகுறிச்சி ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கு கொரோனா உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.