Categories
தேசிய செய்திகள்

”கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா” மத்திய அரசு அறிக்கை …!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு காரணம் வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.கேரளாவில் மாணவி ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கேரளாவில் வைரஸ் தாக்குள்ளான மாணவி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரக் கூடிய நிலையில் இரண்டாவது நபர் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தற்போது மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.அதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும் , அவர் சீனாவில் இருந்து வந்திருப்பதாகவும் , சீனாவில் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் ,  அவர் நாடு திரும்பியதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் அவர் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

.

Categories

Tech |