கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகில் கொரோனா தொற்று பரவலானது தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும் சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று உருவெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்திலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை முன்கூட்டியே மூடவும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதிக்க கூடாது எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி மற்றும் திரையரங்குகளுக்கு மட்டும் பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மார்க் ரூட் அறிவித்துள்ளார். இதுவரை நெதர்லாந்தில் 22,58,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 16, 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.