கொரோனா தொற்று பரவல் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கபப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் இதன் இரண்டாம் அலை தாக்கத்திற்கு பின்னர் தான் உலகம் முழுவதும் தொற்றிலிருந்து படிப்படியாகப் மீண்டு வருகின்றது.
இந்த நிலையில் கொரோனா தொற்று எங்கே தொடங்கியதோ அங்கேயே திரும்பியுள்ளது. அதாவது, சீனாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது இரட்டிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் சீனா மற்றும் ரஷ்யா எல்லைப் பகுதியில் இருக்கும் ஹெய்ஹெ நகர நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்று பரவல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 100,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11,58,00,000 பரிசுத்தொகை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.