உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்து வரும் நிலையில் ஸ்வீடன் தற்போது தடை விதித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் ஐரோப்பியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருகின்றனர். உலகின் புகழ் பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா என்னும் நிறுவனமும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது .இந்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த உறைவு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஐரோப்பியா சர்வதேச ஒழுங்கு முறை நிறுவனங்கள் தடுப்பூசி பாதுகாப்பாகத்தான் இருக்ககிறது என்று தெரிவித்துள்ளது .
அஸ்ட்ராஜெனேகா தயாரித்து வரும் தடுப்பூசிகளை பல நாடுகள் உபயோகித்து வருவதாகவும் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து தடுப்பூசிகளின் நிறுத்தியது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான் என்று ஸ்வீடன் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டரஸ் டெக்னெல் விளக்கம் தெரிவித்தார்.கொரோனா தடுப்பூசியை வழங்குவதை தீவிரபடுத்துவதற்காக ஜெர்மனியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாநாடு நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த 3 தடுப்பூசிகள் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் பல சிக்கல்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மேலும் இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பியா மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பற்றிய கருத்தை நிபுணர் குழு சோதனையின் அடிப்படையில் தனது இறுதி முடிவை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.