Categories
அரசியல்

கொரோனா நிவாரண பணி.. “ஒன்றிணைவோம் வா”புதிய குழு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுகவினர் ஈடுபடவேண்டும் என்று முக. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா நிவாரண பணிகளுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற திமுக நிர்வாகிகள் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து  காணொலி காட்சி மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 200 பேருடன் அவர் கலந்துரையாடினார்.

அப்பொழுது தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் பற்றி அவர் கேட்டறிந்தார். “ஒன்றிணைவோம் வா” என்ற புதிய முழக்கத்தை முன்வைத்து அதற்கான தனி இணையதளத்தை தொடங்கி கைகோர்க்க உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதில் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயக்கமின்றி தொடர்பு கொண்டு பேசலாம் என்று கூறி திமுக முன்னணியினருக்கு மு.க.ஸ்டாலின் ஊக்கம் அளித்திருக்கிறார்.

சுற்றுவட்டாரங்களில் இருப்பவர்களுக்கு திமுகவினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ” ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் புதிய இணையதளத்தை தொடங்கி உள்ள அவர் அதற்கான உதவி செல்போன் எண்ணையும் கொடுத்து இருக்கிறார். மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு தமிழகத்திலுள்ள தன்னார்வத் தொண்டர்களையும் ஒரே குழுவாக ஒன்றிணைத்து மக்களுக்கு உதவும்படி நிர்வாகிகளை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |