Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் சலித்தவர்கள் இல்லை… கொரோனா தடுப்பூசி தயாரிக்க இந்தியா தீவிரம்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவிற்கு தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் போட்டியில் குதித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவற்றில் சைடஸ் கேடிலா, சீரம் என இரு நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்புகளிடம் பதிவு செய்து சர்வதேச அளவில் போட்டியில் இருப்பதை உறுதி செய்துள்ளது. உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராவது வரவேற்கத்தக்கது என்று சர்வதேச தடுப்பூசி கழகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் 115 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 78 தடுப்பூசிகள் ஆய்வகப் பரிசோதனையில்  உள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 தடுப்பூசிகள் மட்டுமே மனிதர்களிடம் இரண்டாம் கட்ட பரிசோதனையின் உள்ளது. உயிரிழந்தவர்களை முறைப்படி அடக்கம் செய்யக்கூட முடியாமல் தவிக்கும் இத்தாலி தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வருவதை எதிர்நோக்கி உள்ளது.

வழக்கமாக ஒரு தடுப்பூசி மக்களிடையே பயன்பாட்டிற்கு வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் மிக வேகமாக பரவும் திறம் கொண்ட கொரோனோவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதால், அதனை இன்னும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Categories

Tech |