Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்”… மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்தத் தொற்று இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றானது உருமாறிக் கொண்டே மக்களை அச்சுறுத்து வருகிறது.

கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதன் பிறகு உலக அளவில் தினந்தோறும் சராசரியாக 5.87 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் 153 ஆக இருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் தொற்றை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. மேலும் விழா காலங்கள் தொடங்குவதால் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மீண்டும் கொரானா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Categories

Tech |