Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருப்பதி கோவில் அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு…!!

திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே சமயம் வழக்கமான பூஜைகள் நடந்து கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் கோவில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 காவலர்கள் உள்பட  170க்கும் மேலானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டது.

மேலும் , திருப்பதியில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் திருப்பதியில் சுமார் 7000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீண்டும் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள் உணவகங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதியில் காலை 11 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்த சீனிவாசாச்சார்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அர்ச்சகர், சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |