கொரோனா தொற்று எச்ஐவி போன்று உலகை விட்டு எப்பொழுதும் போகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் முடங்கிப்போன பொருளாதாரத்தை காப்பாற்றவும் தயாராக இருக்கும் நிலையில் கொரோனா தொற்று உலக மக்கள் மத்தியில் தங்கிவிடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் கூறியிருப்பதாவது, “மனித சமூகங்களில் இருக்கும் மற்றொரு வைரஸ் போன்று கொரோனா தொற்று மாறக்கூடும்.
இந்த தோற்று எப்பொழுதும் இங்கிருந்து போகாது. எச்ஐவி போகவில்லை ஆனால் நாம் அந்த வைரஸ் பற்றி புரிந்து கொண்டோம். எதுவாயினும் ஊரடங்கை தளர்த்துவது கொரோனா தொற்றின் புதிய அலைகளை கொண்டு வருமா இல்லையா என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது.தொற்றின் அபாயம் அதிகமாக இருப்பதனால் அனைத்து நாடுகளும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் விரும்புகின்றார்.
சுகாதார பணியாளர்களின் மீது வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கின்றது. கொரோனா தொற்று நம்மிடம் இருக்கும் மிக சிறந்ததையும் வெளிப்படுத்துகின்றது. மோசமான சிலவற்றையும் வெளிப்படுத்துகின்றது. உதவுவதற்கு முயற்சிக்கும் தனிநபர்கள் மீது தங்களது விரக்தியை வெளிக்காட்ட அதிகாரம் பெற்றுள்ளதாக மக்கள் உணர்கின்றனர். இது புத்தி இல்லாதவர்களின் வன்முறை மற்றும் பாகுபாடு செயல்களாக இருக்க வேண்டும் என மைக்கேல் ரியான் கூறியுள்ளார்.