மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலரான தனது தந்தையை அவரது குழந்தை கதறி அழுது போக வேண்டாம் என்று கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலர் ஒருவரது குழந்தை தனது தந்தையை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறி அழும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை பகிர்ந்து உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.மேலும் காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.