டாஸ்மாக் மதுக்கடைகளும், கோயம்பேடு சந்தையும் திறக்கப்பட்டதன் விளைவுதான் கொரோனா உயர்வுக்கு காரணம் என எம்.பி செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் மதுக்கடைகளையும், கோயம்பேடு சந்தையையும் திறந்ததன் காரணமாகத்தான் தமிழ் நாட்டில் இவ்வளவு அதிகமாக கொரோனா பரவியுள்ளது எனவும், இதில் டாஸ்மாக் கடையின் வருமானம் தேவையற்ற ஒன்று என்றும் தெரிவித்தார்.
மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே அவர்களை ஊருக்கு அனுப்ப அரசு வழி செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை எனவே தான் அவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.