விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கிய அரசை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து நெசவாளர் காலனி, ஸ்ரீவில்லிபுத்தூர், இனாம் கரிசல்குலம் ஹவுசிங் போர்டு, இராமலிங்கபுரம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், வடக்கு கரிசல்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பாஜகவினர் கருப்புக் கொடிகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டீக்கடையில் பரவும் கொரோனா டாஸ்மாக் கடையில் பரவாத எனவும், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடதே எனவும் பல கோஷங்களை எழுப்பியுள்ளனர்.