Categories
உலக செய்திகள்

கான்டாக்ட் லென்ஸால்….. கொரோனா….. அதிர்ச்சி தகவல்….!!

கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பு வரலாம் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கான்டாக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்து இருப்போருக்கு கொரோனா வர வாய்ப்பிருப்பதால் அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி காண்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க american academy of ophthalmology சேர்ந்த நிபுணர்கள் கான்டக்ட் லென்ஸ்களை அணியவும், கழற்றவும் கண்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொட வேண்டியிருக்கும் எனவும், கை கழுவும் போது அவ்வாறு கண்களை தொட நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். ஆதலால் கழற்றி வைத்து விட்டு கண்ணாடிகளை அணியும்படி கூறியுள்ள அவர்கள் இதனால் கொரோனா பரவாமல் தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |