Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 2,985 பேர் குணமடைந்தனர் …!!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2985 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு  திரும்பியுள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 2889 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 2427 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது 326 ஆண்கள், 136 பெண்கள் உள்ளிட்ட 460 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் வடசென்னை பகுதி மக்களுக்காக சென்னை வியாசர்பாடி டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 723 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அதில் 558 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 167 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |