கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா வீடு திரும்பினார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் முன்னணி நடிகை தமன்னா, தெலுங்கு இணைய வழி தொடர் ஒன்றின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்தார். அப்போது தமன்னாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள குவான்டினெண்டல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும், விரைவில் கொரோனாவிலிருந்து பூரண குணம் அடைவேன் என நம்புவதாகவும் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். அடுத்த சில தினங்களுக்கு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.