மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கியது. மேலும் ரேஷனில் ஊரடங்கு தொடங்கியது முதல் தற்போது ஜூன் மாதம் வரை விலையில்லா உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் பேருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.