Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரின் அதிரடி உத்தரவால்… முதல் தவணையாக தொடங்கப்பட்ட… சிறப்பு நிவாரண நிதி..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது.

கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக இந்த மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் உத்தரவிட்டு, அந்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 758 பேருக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிவாரண நிதியின் முதல் தவணையாக வழங்க ரூ.36 கோடியே 55 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணி தொடங்கப்பட்டது.

மேலும் ரேஷன் கடைகளில் எந்த நேரத்தில், எந்த தேதியில் நிவாரண நிதி பெற வேண்டும் என்பதற்கான டோக்கன்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் 282 ரேஷன் கடைகள் மூலம் காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்கள் கடை திறப்பதற்கு முன்னதாகவே கையில் டோக்கனுடன், முக கவசம் அணிந்து வந்து காத்திருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். அதன் பின்னர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதனை ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

Categories

Tech |