சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த மாதங்களில் மாவட்டத்திலுள்ள மார்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி மற்றும் தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
ஆனால் தற்போது ஊரடங்கினால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாம்பழங்கள் மரத்திலேயே பறிக்காமல் விவசாயிகள் விடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாம்பழங்கள் மரங்களிலேயே அழுகி வீணாகி போகின்றதால் மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழக அரசிடம் விவாசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.