Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மேலும் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கினார் எம்.பி கவுதம் காம்பீர்

கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, எம்.பி கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே அவர் ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு கொரோனா உள்ளது.

கொரோனா காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முடிந்த நிவாரணம் தரக்கோரி மத்திய, மாநில அரசுக்கள் நிவாரண அறக்கட்டளையை துவங்கியுள்ளன. அதில் பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், சினிமா பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், எம்.பி. கவுதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் டெல்லி அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

Categories

Tech |