கொரோனா தடுப்பு பணிக்காக பிரபல நடிகை 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இதனை சமாளிப்பதற்காக கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று தமிழ் சினிமாவின் முக்கிய திரை நட்சத்திரங்களான ரஜினி காந்த், அஜித், சிவகார்த்திகேயன், ஷங்கர், முருகதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான பூமி, ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நிதி அகர்வால் கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். இதேபோல் பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி உதவி வழங்கி வருகின்றனர்.