Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை – முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க நேற்று மாலை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31ம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் 3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து முடிவு எடுக்க முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை முடக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் அந்த மாவட்டமும் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மேலும் சில மாவட்டங்கள் இணைக்க வாய்ப்புள்ளது. கோவையில் ஸ்பெயினில் இருந்து வந்த மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருநெல்வேலியில் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களையும் முடக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |