தமிழக முதல்வரின் அரசியல் வியூகத்தை தனக்கான அரசியல் ஸ்கோராக முக.ஸ்டாலின் மாற்றியுள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ள போகும் நடவடிக்கை குறித்து அனைத்து எதிர்கட்சியினரிடமும் ஆலோசித்தது. பிரதமர் மோடி காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதே போல முன்னாள் பிரதமர், முன்னாள் குடியரசுத்தலைவர் என அனைவரிடமும் மத்திய அரசு ஆலோசித்து தான் கொரோனா குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
அதே போல அண்டை மாநிலமான கேரளாவிலும் ஆளும் கட்சி , எதிர் கட்சி அமர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் பிற பகுதியில் உள்ள மாநிலத்திலும் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அமர்ந்து ஆலோசிக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தலை கீழாக நடைபெறுகின்றது.
கொரோனா பரவல் நடவடிக்கையை அரசு தொடங்கிய போதே எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் ஆளும் அதிமுக அதற்க்கு மறுத்து விட்டது. இதில் அரசியல் செய்யக்கூடாது என்று கூறி தடுத்துவிட்டது. அதிமுகவின் இந்த செயலை தமிழக கட்சிகள் பலவும் கண்டித்தன.
அதே போல தமிழக அரசு கொரோனாவுக்கு வழங்கும் நிவாரண உதவியை தனி நபர்கள், அரசியல் கட்சிகள் வழங்க கூடாது. பணமாக இருந்தால் முதல்வரின் பொதுநிவரான நிதிக்கும், அரசி உட்பட உணவாக இருந்தால் மாநகர ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார். மற்ற கட்சிகள், தனி நபர்கள் அனைவரும் செய்யும் நிவாரணம் அரசு செய்வதை போல மாற்றினார் எடப்பாடி. சமூக விலகல் அவசியம் என்ற காரணத்தை வைத்து நியாயப்படுத்தினார்.
இந்நிலையில் திமுக சார்பில் வருகின்ற 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளும் அதிமுக அரண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் இக்கட்டான நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்ததுங்கனு எதிர்க்கட்சி கூறினால் அதை அரசியலுக்காக கண்டுகொள்ளாமல் புறக்கணித்த நிலையில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி போல களமிறங்கி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மொத்தத்தில் எடப்பாடியாரின் அரசியல் ஆட்டத்தில் முக.ஸ்டாலின் ஸ்கோர் செய்துள்ளார்.