கொரோனா பரவல் காரணமாக பட்டினியின் பிடிக்குள் உலகம் முழுவது 26கோடியே 50 லட்சம் பேர் பெரிதும் பாதிப்படைவார்கள் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், உலகம் முழுவதும் 26 கோடியே 50 லட்சம் பேர் பட்டினியின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என ஐநா மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சனை ஆகியவை குறித்து ஐநா உலக உணவு திட்டம் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் கொரோனா பரவலுக்கு முன்பே 2019ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பின்மையால் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் இரட்டிப்பாக உயரும் என ஐநா மன்றம் எச்சரித்துள்ளது. இந்த கணக்கீட்டின் படி 26 கோடியே 50 லட்சம் பேர் பட்டினி கொடுமையால் பாதிக்கப்படுவார்கள்.
உலகின் 50 நாடுகளில் பட்டினி கொடுமையில் சிக்கித் தவிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தலா 10 விழுக்காடு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இதற்கு உள்நாட்டு மோதல்கள், பொருளாதார சரிவு, வறட்சி போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.